நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட நபர்கள் சட்டவிரோதமாக ஆவணங்களை எடுத்துச் சென்றததாக புகார்


விருதுநகர் கச்சேரி ரோட்டில் இயங்கி வந்த தனியார் நிதி நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டு அது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் வழக்கு நிலுவையில் உள்ள போது மேற்படி நிதி நிறுவனம் சட்டவிரோதமாக திறக்கப்பட்டு அங்கிருந்த முக்கிய ஆவணங்களை அதன் உரிமையாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் எடுத்துச் சென்றதாக அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

மேலும் மேற்படி நிதி நிறுவன அலுவலகங்களின் சாவிகளை சட்டப்படி கைப்பற்ற வேண்டும் என்றும், சட்டவிரோதமாக செயல்பட்ட உரிமையாளர்களின் முன் ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்கள்  தங்களுக்கு முதலீட்டு தொகையை திரும்ப பெற்றுத் தர வேண்டும்  என்றும் 50க்கும் மேற்பட்டோர்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாளை சந்தித்து மனு அளித்தனர்.

Post a Comment

0 Comments