ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஊராட்சி ஒன்றியம் அஞ்சானூர் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் இருகாலூர் மாரியம்மன் கோவில் திடலில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மணியன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு பொதுமக்கள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டது.
இதில் அஞ்சானூர் ஊராட்சிக்கு உட்பட்ட பனங்காட்டு பாளையம் பகுதியில் புதிய கல்குவாரி அமைப்பதற்கான அனுமதியை அரசு வழங்கியுள்ளது அந்த அனுமதியை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பள்ளி அருகே இருப்பதாலும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாலும் அனுமதியை ரத்து செய்து நிரந்தரமாக கல்குவாரியை மூட வேண்டும் என பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை வைத்து தீர்மானத்தை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என அதிகாரிகளை முற்றுகையிட்டு விவாதம் செய்தனர்.
இதனை அடுத்து நம்பியூர் காவல் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆகியோர் பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர் அதனைத் தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் கல்குவாரியை ரத்து செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி பொதுமக்களிடம் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அந்த நகலினை பொது மக்களிடம் வழங்கினர்.
இது சம்பந்தமாக பொதுமக்கள் கூறிய போது நம்பியூர் தாசில்தார், கோபி வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சி தலைவர் என பல்வேறு இடங்களில் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
கிராம சபை தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் நலன்களை காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதனால் அஞ்சானூர் கிராம சபை கூட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பாக காணப்பட்டது.
நம்பியூர் ஊராட்சி ஒன்றியம் அஞ்சானூர் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

0 Comments