ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கெட்டிசெவியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி முதலாம் ஆண்டு நினைவு விழா கற்றல் நிகழ்ச்சி கொண்டாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சித்ரா தமிழக பள்ளிக் கல்வித் துறையின் மூலம் அறிமுகம் செய்துள்ள எண்ணும் எழுத்தும் கற்றல் திட்டத்தைபற்றியும் சிறப்புரையாற்றினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள்தொழிலாளர்கள் போல் வேடமிட்டு என் மேடை என் பேச்சு மூலம் தங்களின் தனித்திறமை களை வெளிப்படுத்தினார்கள். அதைத்தொடர்ந்து எஸ்எம்சி பிடிஏ உறுப்பினர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு வகுப்பறைகளை பார்வை செய்தனர்.
முடிவில் விழாவில் கலந்து கொண்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கு இனிப்பு வழங்கியும் சிறப்பு பரிசுகள் வழங்கியும் விழாவை கொண்டாடினார்கள்.எண்ணும் எழுத்தும் கற்றல் நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்கள் இந்துமதி ஷெர்லி பிரசில்லா பூர்ணிமா ஆகியோர் ஏற்பாடு செய்தனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

0 Comments