மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாதாந்திர மீனவர் குறை தீர்ப்பு முகாம் ஏற்படுத்துக: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேண்டுகோள்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பி.முஹம்மது மீரான் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

புதுக்கோட்டை மாவட்டம் அதிக மீனவ கிராமங்களை கொண்ட மாவட்டமாகும்.முத்துக்குடா,ஆர்.புதுப்பட்டினம்,கோபாலப்பட்டினம்,ஜெகதாப்பட்டினம்,கோட்டைப்பட்டினம்,புதுக்குடி,அம்மாப்பட்டினம்,மணமேல்குடி,வடக்குஅம்மாப்பட்டினம்,கிருஷ்னாஜிப்பட்டினம், கட்டுமாவடி என பல்வேறு மீனவ கிராமங்களில் இருந்து தினந்தோறும் சுமார் 80,000 ஆயிரம் மீனவர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறார்கள்.

இப்படி கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படை மற்றும் இலங்கை மீனவர்களால் தாக்கப்படுவது,  அவர்களுடைய மீன்பிடி படகும் சாதனங்களும் சேதப்படுத்தப்படுவது, இன்னும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது போன்றவைகள் நித்தம் நித்தம் தமிழக மீனவர்கள் வாழ்வில் நடக்கும் சோக நிகழ்வாகவே மாறிவிட்டது.பல நேரங்களில் உயிரிழப்புகள் கூட ஏற்படுத்தப்பட்டு மீனவ கிராமங்களே சோகத்தில் மூழ்கக் கூடிய கண்ணீர் காட்சிகளை நாம் கண்டு வருகிறோம்.

எதிர்காலத்தில் இது போன்ற சோக நிகழ்வுகள்  நடக்காமல் இருப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாதத்தில் ஒருமுறையாவது மீனவ மக்கள் அதிகம் வசிக்கக் கூடிய பகுதியில் மீனவ மக்களிடம் குறை கேட்கும் சிறப்பு முகாமை நடத்தி மீனவ மக்களின்  நியாயமான கோரிக்கைகளை ஒன்றிய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அவற்றை போக்குவதற்குறிய  நடவடிக்கை எடுக்க வேண்டுமாயும், மீனவர்களுடைய வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டுமாயும் பொதுநலம் கருதி தங்களை கேட்டுக் கொள்கிறேன். என தனது அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments