திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியத்திற்குட்பட்ட வக்ராநல்லூர் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபா கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சித்தலைவர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சாருஸ்ரீ தெரிவித்ததாவது…இன்றைய தினம் உலக தண்ணீர் தினமாகும். நீரின்றி அமையாது உலகு என்பதற்கு ஏற்ப இன்றைய சூழ்நிலையில் தண்ணீர் தேவை அதிகரித்து வருகிறது.
நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலை நீடித்தால் வருங்கால சந்ததினர்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் போய்விடும் இதையறிந்த நமது முன்னோர்கள் ஊர் தோறும் நீர்நிலைகளை உருவாக்கி நிலத்தடி நீர்மட்டத்தை காத்து வந்தார்கள். நீரின் பயன்பாட்டை நாம் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து நீர் மேலாண்மையை செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு ஊராட்சியிலும் அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. உலக தண்ணீர் தினமான இன்று நாம் அனைவரும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த உறுதிமொழி எடுத்து கொள்ள வேண்டும் அனைத்து வீடுகளிலும்மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் 2030-க்குள் அனைவருக்கும் தண்ணீர் மற்றும் சுகாதாரம் சென்று சேர்ந்திட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்குகளை அடைய நாம் தனிமனிதனாக குடும்பமாக, பள்ளியாக, சமூகமாக இணைந்து செயல்பட வேண்டும்.இன்று வக்ராநல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம் பிரதம மந்திரி கிராம சாலை திட்டம் மக்கள் திட்டமிடல் இயக்கம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டம்தூய்மை பாரத இயக்கம் சமுதாயம் சார்ந்த அமைப்புகளில் நிர்வாகிகளை சுழற்சி முறையில் மாற்றம்செய்தல் பண்ணை சார்ந்த மற்றும் சாரா தொழில்கள், மக்கள் நிலை ஆய்வு, வறுமை குறைப்பு திட்டம் மற்றும் இதர தலைப்புகளில் விவாதிக்கப்பட்டது. கிராம ஊராட்சிகள் அனைத்து நிலைகளிலும் தன்னிறைவை பெறும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள், திட்டப் பணிகள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது என மாவட்ட ஆட்சியர்.சாருஸ்ரீ தெரிவித்தார்.அதனைத் தொடர்ந்து பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு குடியிருப்பு ஆணைகளையும், வேளாண்மைத்துறை சார்பில் வேளாண் இடுப்பொருட்களையும் தோட்டக்கலைத்துறை சார்பில் மரக்கன்றுகளையும் சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தை பாதுகாப்பு நிதிக்காக ஆணையையும் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ., வழங்கி, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.மேலும் அரிச்சந்திரபுரம் ,பாலாக்குறிச்சி வக்கிராநல்லூர் ஆகிய ஊராட்சி களின் சார்பில் புத்தகதிருவிழாவிற்க்கான நிதிக்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் மகளிர் திட்டம்.வடிவேல், மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியார் .கீர்த்தணாமணி, உதவி இயக்குநர் ஊராட்சிகள் பொன்னியின்செல்வன், வேளாண்மை இணை இயக்குநர் லட்சுமிகாந்தன், வட்டாட்சியர் சோமசுந்தரம் வட்டார வளர்ச்சி வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார், விஸ்வநாதன், மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் .புவனா, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் தங்கம்மாள் அருண், வக்ராநல்லூர் ஊராட்சிமன்றத்தலைவர் இல்முனிஷா பேகம், துணைத்தலைவர் முகமது மகதும் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments