ஈரோடு மாவட்டம், ஈரோடு ஊராட்சி ஒன்றியம், எலவமலை ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மூலப்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி இ.ஆ.ப. கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். உடன் ஈரோடு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பிரகாஷ், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ் குமார் மற்றும் எலவமலை ஊராட்சிக்குட்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

0 Comments