பெரியகுளத்தில் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற வேண்டி சிறப்பு யாகம்

 


தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இந்துசமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ கோபால கிருஷ்ணசுவாமி திருக்கோவிலில்-நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற வேண்டி ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பகவத்பிரார்த்தனை,புண்ணியாக வாசகம்,அக்னி பிரதிஷ்டை,கலச பூஜை,மூலமந்திர ஜெபம்,பாராயணம்,மூலமந்திரஹோமம்,பூர்ணாஹுதி,தீபாராதனை,மாணவ மாணவியர்பெயரில் சிறப்பு பிரார்த்தனை,500மாணவர்களுக்கு பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை இந்து சமயஅறநிலையத் துறை பெரியகுளம் செயல் அலுவலர் ராமத்திலகம்,ஏற்பாட்டில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.அர்ச்சகர் கண்ணன் பட்டாச்சார் சிறப்பு பூஜைகள்செய்து மாணவ மாணவியர்களுக்கு பிரசாதங்களை வழங்கினார்.சிறப்பு பூஜையில் பள்ளி மாணவ மாணவியர் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments