பெரியகுளம் நகராட்சிக்கு பேரிஜம் ஏரியில் இருந்து குடிநீர் திறப்பு

 


தேனி மாவட்டம் பெரியகுளம்நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு கடந்த சில தினங்களாக கலங்கலான குடிநீர்வழங்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்ததை அடுத்து கலங்கலான நீர் சோத்துப்பாறையில் இருந்து வெளியேற்றப்பட்டது.இந்நிலையில் கொடைக்கானலில் உள்ள பெரியகுளம் நகராட்சிக்கு பாத்தியப்பட்ட பேரிஜம் ஏரியிலிருந்துகுழாய் மூலமாக சோத்துப் பாறைஅணைக்கு குடிநீர் திறந்து வைக்கப்பட்டது. திமுகதேனி வடக்கு மாவட்ட  செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன்,தலைமையில் தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். சரவணகுமார்,நகர்மன்ற தலைவர் சுமிதாசிவக்குமார்,நகராட்சி ஆணையாளர் புனிதன்,நகர் நல அலுவலர்அரவிந்த் கிருஷ்ணா,திமுக நகர செயலாளர் முகமது இலியாஸ்,நகர் மன்ற உறுப்பினர்கள் சுதா நாகலிங்கம்,வைகை சரவணன்,நாகபாண்டி மகேந்திரன்,பிரியங்காராஜ்குமார்,அப்துல்மஜீத்,ரூபினி, பால்பாண்டி, வெங்கடேசன், மதன்குமார்உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் நகராட்சி பணியாளர்கள் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments