விருதுநகரில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் பூங்கோதை தலைமையில்,விவசாய தொழிலாளர்களுக்கு தனித்துறையை தமிழக அரசு உருவாக்கிட வேண்டும், நூறுநாள் வேலைத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீட்டை மத்திய, மாநில அரசுகள் குறைக்க கூடாது,சட்டக் கூலியை  ரூபாய் 600 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும்,ஆறுகளை காப்பாற்றிட கரைகளில் மரம் நடும் பணிக்கு நூறு நாள் வேலை த் திட்டத்தில் பணி செய்யும் தொழிலாளர்களை பயன்படுத்திட வேண்டும், வீட்டுமனை பட்டாவை எல்லோருக்கும் வழங்கிட வேண்டும் உள்ளிட்டு 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பாக 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Post a Comment

0 Comments