கடந்த 2019 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது பாரத பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இன்று ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் தொடர் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று விருதுநகர் எம்.ஜி.ஆர் சிலை அருகில காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் மாவட்ட தலைவர் T.G.நாகேந்திரன் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெயிலு முத்து முன்னிலையில் காங்கிரஸ் கட்சியினரைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

0 Comments