• Breaking News

    தேனியில் கையில் அனைத்து கட்சி கொடிகள் உடன் வந்த நபரால் பரபரப்பு


    தேனி மாவட்டம், பூதிபுரம் பகுதியை சேர்ந்தவர் கேரள புத்திரன். இவர் நேற்று தேனி கலெக்டர் அலுவலக நுழைவாயிலில், கையில் கோரிக்கை மனுவுடன் அனைத்துக் கட்சிக் கொடிகளுடன் வருகை புரிந்தார். அவர் வைத்திருந்த மனுவில் : "தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆதிபட்டி முதல் புதிபுரம் வரை, 5.50 கி.மீ., தொலைவு பகுதியில் சாலையை சீரமைப்புடன் சாலை விரிவாக்கம் செய்யவும் வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கையில் அனைத்து கட்சி கொடிகளுடன் சாலை அமைக்க வேண்டி கோரிக்கை மனு வழங்குவதற்காக கவிஞர் கேரள புத்திரன் என்பவர் வந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    No comments