ராகுல்காந்தி எம்பி பதவி தகுதி நீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கடலில் இறங்கி போராட்டம்; தொண்டர் ஒருவர் கடலில் இறங்கி தற்கொலைக்கு முயன்றதால் பரப்பரப்பு
கடந்த 2019 மக்களவை தேர்தலின் போது கர்நாடக மாநிலம் கோலாரில் நடைப்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடி என்ற குடும்ப பெயரை மையப்படுத்தி ராகுல்காந்தி அவதூறாக பேசியதாக பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் ராகுல்காந்தி குற்றாவாளி என குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்து 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியது. இதனைத் தொடர்ந்து ராகுல்காந்தியின் எம்பி பதவியை மக்களவை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இதனால் நாடு முழுவதுமுள்ள காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்து பல்வேறு போராடங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் கல்லார் கடற்கரையில் மீனவரணி மாநிலச் செயலாளர் விஜயகுமார் தலைமையில் திரண்ட காங்கிரஸ் கட்சியினர் கையில் கட்சி கொடியினை ஏந்தி கடலில் இறங்கி கண்டன போராட்டத்தில் ஈடுப்பட்டனர். காங்கிரஸ் மாவட்ட தலைவர் அமிர்தராஜா மீனவர் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைப்பெற்ற போராட்டத்தில் ராகுல்காந்தி எம்பி பதவி நீக்கத்தை கண்டித்தும், பிஜேபி மோடி அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது காங்கிரஸ் தொண்டர் ஒருவர் ராகுல் காந்தி எம்பி பதவி தகுதி நீக்கத்தை கண்டித்து கடலில் இறங்கி தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அங்கிருந்த போலீசார் கடலில் இறங்கி அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதனால் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்திர் ஜே கே டி ராஜ்குமார், நாகை மாவட்ட காங்கிரஸ் எஸ் சி துறை தலைவர், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம் பி உதயசந்திரன், மாணவர் காங்கிரஸ் தலைவர் கோபி, மாவட்ட பொதுச் செயலாளர் தெய்வானை, வட்டார தலைவர் திருமகள் சுரேஷ்குமார், உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் 50 க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.
No comments