தமிழக அரசுக்கு ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் அதியமான் நன்றி அறிவிப்பு - MAKKAL NERAM

Breaking

Thursday, April 27, 2023

தமிழக அரசுக்கு ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் அதியமான் நன்றி அறிவிப்பு


கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய பட்டியலின மக்களுக்கு ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை வழங்க கோரி சமூக நீதி காவலர் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் முன்மொழிந்த தீர்மானத்தை ஆதித்தமிழர் பேரவை வரவேற்று நன்றி தெரிவிக்கிறது. இந்தியா ஒன்றியத்தில் வாழ்கின்ற பட்டியல் சமூக மக்கள் தங்களின் ஒழித்து மாண்புக்கான வாழ்வைத் தேடி பல்வேறு மீதான இழிவை ஒழித்து மதங்களுக்கு மாறி வருகின்றனர். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி இந்து, சீக்கியம்,பெனத்தம் உள்ளிட்ட மதங்களில் வாழ்கின்ற பட்டியல் சமூக மக்களுக்கு மட்டும்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கின்ற கல்வி வேலை வாய்ப்பு முடியும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களுக்கு இது பொருந்தாது. ஆனால் நடைமுறையில் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினாலும் சலுகைகள் ஏதும் கிடைக்காத காரணத்தினால் இவர்களுடைய வாழ்க்கை தரம் பெரிய அளவில் மாறவில்லை. இந்தியா ஒன்றியத்தில் எந்த  மதங்களுக்கு வேண்டுமானாலும் மாறலாம். ஆனால் சாதி மாற முடியாது. இந்து மதத்தில் எந்தெந்த காரணங்களுக்காக இவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டனவோ அது போன்று சாதி மாற முடியாது என்று சொன்னால் மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கும் சாதி மாறாது என்ற அடிப்படையில் அதே சலுகைகள் வழங்குவது தான் சரியாக இருக்கும். இது ஆதித்தமிழர் பேரவை பல்வேறு முற்போக்கு இயக்கங்களின் தீண்ட நான் கோரிக்கை ஆகும் எங்களின் கோரிக்கையை ஏற்று இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முன்மொழிந்த இந்த தீர்மானம் 70 ஆண்டுகளுக்கு மேல் போராடி வருகின்ற மதம் மாறிய கிறிஸ்துவ மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி ஆகும்.

 மேலும் மதம் மாறிய கிறிஸ்துவ மக்கள் குறித்து நியமிக்கப்பட்ட நீதியரசர் கே. ஜி. பாலகிருஷ்ணனின் குழுவிற்கு இது வலு சேர்க்கும். ஒடுக்கப்பட்ட மக்களில் ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களான அருந்ததியர் சமூகத்திற்கு மூன்று விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்கி சமூக நீதியில் சம நீதியை நிலை நாட்டியதை போன்று மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் வழங்க வேண்டும் என்ற சிறப்புமிக்க இந்த தீர்மானத்தை ஆதித்தமிழர் பேரவை உனமாற வரவேற்கிறது. கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய பட்டியல் சமூக மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றும் இந்த சிறப்புமிக்க தீர்மானத்தை முன்மொழிந்த சமூக நீதி காவலர் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை ஆதித்தமிழர் பேரவை தெரிவித்துக் கொள்கிறது என தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் இரா. அதியமான் தெரிவித்துள்ளார். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment