இங்கிலாந்து ராணி எலிசெபத்தின் இறுதி சடங்கிற்கு ரூ.1,665 கோடி செலவு - MAKKAL NERAM

Breaking

Friday, May 19, 2023

இங்கிலாந்து ராணி எலிசெபத்தின் இறுதி சடங்கிற்கு ரூ.1,665 கோடி செலவு

 


இங்கிலாந்து ராணி எலிசபெத் கடந்தாண்டு செப்டம்பர் 8ஆம் தேதி உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கானது 10 நாட்கள் நடைபெற்றது . அவரது இறுதி சடங்கிற்கும் உலக நாடுகளை தலைவர்கள் பெரும்பாலானோர் வந்திருந்தனர்.  இதனால்லண்டனில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக இருந்தன.

ராணி எலிசபெத்தின் நல்லடக்கம் செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெற்றது. இந்த 10 நாள் இறுதி சடங்கு செலவை இங்கிலாந்து அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான செலவு மொத்தமாக இந்திய ரூபாய் மதிப்பில் 1,665 கோடி என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராணி எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து அவரது மகன் 3ஆம் சார்லஸ் அண்மையில் இங்கிலாந்து மன்னராக பதவி ஏற்றுக்கொண்டார்.

No comments:

Post a Comment