46 லட்சம் சப்ஸ்கிரைபர்களை இழந்த ஹாட்ஸ்டார்... காரணம் என்ன? - MAKKAL NERAM

Breaking

Sunday, May 14, 2023

46 லட்சம் சப்ஸ்கிரைபர்களை இழந்த ஹாட்ஸ்டார்... காரணம் என்ன?

 


ஓடிடி என்றாலே டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தான் பலருக்கும் பிடித்த ஒன்றாக இருந்தது. ஏனென்றால், இந்த ஓடிடி தளம் தான் ஐபிஎல் ஸ்ட்ரீமிங் உரிமையை கடந்த ஆண்டு வாங்கி வைத்திருந்தது. மாதம் 149 ரூபாய் செலுத்தினால் ஐபிஎல் போட்டிகளை பார்க்கும் வசதி இருந்தது.

இதன் மூலம் பலரும் மாதம் ரூ.149 ரூபாய் சந்தா கட்டி ஐபிஎல் போட்டிகளை பார்த்து ரசித்து வந்தனர். இதனை தொடர்ந்து ஐபிஎல்  ஸ்ட்ரீமிங் உரிமையை ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஜியோ சினிமா இந்த ஆண்டு வாங்கியது. அதுமட்டுமின்றி, ஐபிஎல் போட்டிகளை சந்தா காட்டாமல் பார்க்கலாம் எனும் வசதியையும் கொண்டு வந்தது.

இதன் மூலம் ஜியோ சினிமா 10 மில்லியன் சந்தாதாரர்களைப் பெற்றனர். முந்தைய ஐந்து ஆண்டுகளில், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் IPL இன் ஒரே டிவி மற்றும் டிஜிட்டல் உரிமையை வைத்திருந்த நிலையில், ஜியோ சினிமா  ஸ்ட்ரீமிங் உரிமையை  வாங்கி இலவசமாக பார்க்கும் வசதியை கொண்டு வந்த காரணத்தால் பலரும் ஹாட்ஸ்டாரை விட்டு ஜியோ சினிமாவிற்கு வந்தனர்.

இந்த நிலையில், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஏப்ரல் 1 -ஆம் தேதி  முடிவடைந்த காலாண்டில் மொத்தமாக 4.6 மில்லியன் (46 லட்சம்) சந்தாதாரர்களை இழந்தது.அவர்கள் அனைவருமே ஜியோ சினிமாவின் சப்ஸ்கிரைப்ராக இருக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment