ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் , உக்கரம் ஊராட்சி மில்மேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் 2023 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500 க்கு 473 எடுத்து பள்ளியில் முதலிடம் பிடித்த கே. புவனேஷ் , இரண்டாம் இடம் பிடித்த 500 க்கு 438 செல்வி ஆர். காவ்யா , மூன்றாம் இடம் பிடித்த . 500 க்கு 396செல்வி. எஸ். ராகவர்த்தினி ஆகியோரை உக்கரம் ஊராட்சி மன்ற தலைவர் எம். முருகேசன் சால்வை அணிவித்து வாழ்த்தி ஊக்கத்தொகை வழங்கினார் .
மேற்படி நிகழ்வில் கிராம நிர்வாக அலுவலர் பழனிச்சாமி , பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சந்திரசேகர் , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராம் கருணாநிதி , சூ.ரா மாரிமுத்து உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினார்கள். பள்ளியில் முதலிடம் படித்த கே. புவனேஷ்ஷின் தாயார் வசந்தா உக்கரம் ஊராட்சி தூய்மை காவலர் ஆவார். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி


0 Comments