சென்னை,தி.நகரில் உள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டிற்கு போலீசார் பாதுகாப்பு - MAKKAL NERAM

Breaking

Sunday, May 14, 2023

சென்னை,தி.நகரில் உள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டிற்கு போலீசார் பாதுகாப்பு


பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களையும், கதாநாயகிகளுக்கு முக்கியதுவம் இருக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது “ஃபர்ஹானா” எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த படத்தை திரையிட கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், ரத்து செய்யப்படுவதாக திருவாரூரில் ஒரு திரையரங்கு அறிவித்திருந்தது. இந்த நிலையில், ஃபர்ஹானா படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக கூறி முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. இதனையடுத்து, தற்போது  சென்னை, தி.நகரில் உள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டிற்கு போலீசார் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment