கனவு கன்னி நடிகை ரம்பாவின் சொத்துமதிப்பு எவ்வளவு? - MAKKAL NERAM

Breaking

Friday, June 9, 2023

கனவு கன்னி நடிகை ரம்பாவின் சொத்துமதிப்பு எவ்வளவு?

 


உழவன் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்பா. அப்படத்தை தொடர்ந்து உள்ளத்தை அள்ளித்தா, சுந்தர புருஷன், செங்கோட்டை, விஜபி, அருணாச்சலம், காதலா காதலா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.


ஒரே ஒரு பாடல் அழகிய லலைலாவில் பாவாடையை காற்றில் பறக்கவிட்டு அவர் போட்ட ஆட்டத்தை யாராலும் மறக்கவே முடியாது.தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி, போஜ்புரி போன்ற பல மொழிப் படங்களில் நடித்துள்ள ரம்பா கடைசியாக பெண் சிங்கம் என்ற படத்தில் நடித்திருந்தார்.2010ம் ஆண்டு கனடா தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்.நடிகை ரம்பாவின் சொத்து மதிப்பு 3 மில்லியன் டாலர் வரை இருக்கும் என கூறப்படுகிறது. ரம்பாவின் கணவர் இந்திரகுமார் மேஜிக்வுட்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார்.


இது கிட்சன் மற்றும் படுக்கை அறை, குளியல் அறை உபகரணங்கள் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனமாகும்.

No comments:

Post a Comment