நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி முதலாம் ஆண்டு திருமண நாளை இன்று கொண்டாடி வருகின்றனர். திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திருமண நாளை கொண்டாடும் விக்னேஷ் சிவன், நயன்தாரா தன் இரட்டை மகன்களுடன் (உயிர் ருத்ரோனில், உலக் தெய்வீக்) இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். நயன்தாரா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “என் உயிரோட ஆதாரம் நீங்கள்தானே...நிறைய மகிழ்ச்சி தருணங்களுடன் இந்த ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது." என்று கூறியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
No comments:
Post a Comment