தமிழக முன்னாள் முதல்வர் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜரின் 121,வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூரில் மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
இந்த மாட்டு வண்டி பந்தயத்தை விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் போட்டியில் கலந்து கொண்டு சிரிப்பாய்ந்தன, போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஒட்டி வந்த சாரதிகளுக்கும் விழா கமிட்டி சார்பாக பரிசுத்தொகை மற்றும் சில்வர் அண்டா பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டது, இந்த மாட்டு வண்டியை பந்தயத்தை சாலையின் இரு புறமும் என்று ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
No comments:
Post a Comment