தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை..... மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..... - MAKKAL NERAM

Breaking

Sunday, July 16, 2023

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை..... மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.....

 


தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டும் எனவும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.


மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் வரும் 22-ஆம் தேதி அதாவது ஒரு வாரத்திற்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தெற்கு இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, இதன் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment