கூடக்கரை ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம் நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Sunday, July 16, 2023

கூடக்கரை ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம் நடைபெற்றது


ஈரோடு  மாவட்டம், நம்பியூர் ஒன்றியம், கூடக்கரை ஊராட்சி பகுதியில் தமிழ்நாடு அரசின்  கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை கூடக்கரை அரசு ஆரம்பப்பள்ளியில் நம்பியூர் ஒன்றிய திமுக செயலாளர், நம்பியூர் பேரூராட்சி தலைவர் மெடிக்கல்.ப.செந்தில்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மருத்துவர்கள் குமார் ,  ரங்கசாமி , சண்முகம்  மற்றும் செவிலியர்கள் முன்னிலையில் திட்டத்தை துவக்கி வைத்தார் . இம்முகாமில் பொது மருத்துவம் , இருதய நோய்கள் ,  சர்க்கரை நோய்கள் , குழந்தைகள் மருத்துவம் , அறுவை சிகிச்சை , எலும்பு முறிவு , மகப்பேறு மருத்துவம் , தோல் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம் , மனநலம் , பல் மருத்துவம் ,பிசியோதெரபி பரிசோதனைகள் ரத்த வகை மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் ,சர்க்கரை நோய் பரிசோதனைகள் , ரத்த அழுத்தம் , கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஸ்கேன் மார்பக மற்றும் கர்ப்பப்பைபரிசோதனைகள், தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகள் மற்றும் சித்த மருத்துவம், ஆகியவற்றுக்கான மருத்துவ சிகிச்சை, ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் வழங்கப் படுவதிற்காக அமைக்கப்பட்டுள்ள தனித் தனி அறைகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

பரிந்துரைக்கப்படும் மாத்திரைகள் மருந்துகள் ஆகியவற்றையும்,சித்த மருத்து நிலவேம்பு குடிநீர்,கபசுர குடிநீர் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கியும்,மருத்துவம் சார்ந்த சுகாதார கண்காட்சிகளை பார்வையிட்டார்.இந்நிகழ்வின் போது மாவட்ட நெசவாளர் அணி தலைவர் என்.சி. சண்முகம் , மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் ஆ.பூர்ணசந்திரன் ,  நம்பியூர் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.பி. சண்முகசுந்தரம் , முன்னாள் ஒன்றிய கழகத் துணைச் செயலாளர் மைக்.பழனிச்சாமி , கிளைக் கழக நிர்வாகிகள் டைமண்ட் பழனிச்சாமி , சித்திரைச்செல்வன் , சக்திவேல் , குமார்  மற்றும் திமுக நிர்வாகிகள், உடன்பிறப்புக்கள், பொதுமக்கள் ஆகியோர் உடனிருந்தனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:

Post a Comment