குத்தாலம் விஸ்வகர்மா சமூக நலச்சங்கத்தின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் விஸ்வகர்மா சமூக நலச்சங்கம் மாதாந்திர கூட்டம் ஆனது தனியார் திருமண மண்டப வளாகத்தில் நடந்தது கூட்டத்திற்கு குத்தாலம் தலைவர் என்.எஸ்.மோகன் தலைமை தாங்கினார்.செயலாளர் சாமிநாதன்.துணைத் தலைவர் சரவணன். துணைச் செயலாளர் குமார்,ஓய்வு பெற்ற ஆசிரியர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.கௌரவத் தலைவர் சம்பந்தம் வரவேற்புரையாற்றினார்.பொருளாளர் ஜி.எஸ்.மணி சிறப்புரையாற்றினார் சிறப்பு அழைப்பாளராக கஞ்சனூர் புலவர் நடராஜன் கலந்து கொண்டார்.பின்னர் விஸ்வகர்மா சமூகத்தை சேர்ந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் நினைவுப் பரிசு வழங்கினார்கள் தொடர்ந்து சங்கத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்டவர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டது இதில் அனைத்து பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு கொண்டனர்.
No comments