• Breaking News

    2023 – 2024 ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியண் வெளியிட்டார்

     


    அமைச்சர் மா.சுப்பிரமணியன் தற்போது 2023 – 2024 ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளார். அரசு ஒதுக்கீடு, 7.5% உள் ஒதுக்கீடு என 3 வகையான தரவரிசைப் பட்டியல் தற்போது வெளியிடபட்டுள்ளது.


    தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர 40,193 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளார்கள். மேலும், அகில இந்திய ஒதுக்கீட்டில் சேர்வதற்கான கலந்தாய்வு வரும் ஜூலை 20-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி வரை 4 சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


    மேலும், மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த  பிரபஞ்சன் என்ற மாணவன் முதலிடம் பிடித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்கள் இடஒதுக்கீடு பட்டியலில், சேலத்தை சேர்ந்த கிருத்திகா, தருமபுரியை சேர்ந்த பச்சையப்பன் மற்றும் காஞ்சிபுரத்தை சேர்ந்த முருகன் ஆகியோர் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனர்.

    No comments