மதுரையில் நடைபெறவுள்ள மாநாடு குறித்து இபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது - MAKKAL NERAM

Breaking

Sunday, July 16, 2023

மதுரையில் நடைபெறவுள்ள மாநாடு குறித்து இபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது

 


அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானதை அதிமுக அவசர செயற்குழு அங்கீகரித்ததைத் தொடர்ந்து, மதுரையில் ஆகஸ்ட் 20ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் எழுச்சி மாநாடு நடத்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்காக 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், ஆகஸ்ட் 20-ல் மதுரையில் நடைபெறவுள்ள மாநாடு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இன்று ஆலோசனை நடத்துகிறார். அதிமுக தலைமை அலுவலகத்தில் மதுரை மாநாட்டு குழுவுடன் நடைபெறும் கூட்டத்தில் மாநாட்டிற்கான ஏற்பாடுகள், நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment