அத்தாணி பேரூராட்சி வார்டு எண் 5-ல் 15வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.87 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்க அந்தியூர் எம் எல் ஏ பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார் - MAKKAL NERAM

Breaking

Saturday, July 29, 2023

அத்தாணி பேரூராட்சி வார்டு எண் 5-ல் 15வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.87 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்க அந்தியூர் எம் எல் ஏ பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்


ஈரோடு மாவட்டம் ,  அந்தியூர் சட்டமன்ற தொகுதி ,  அத்தாணி பேரூராட்சி வார்டு எண் 5 ல் 15 வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் 87 இலட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்க அந்தியூர் சட்ட மன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அத்தாணி பேரூராட்சி தலைவர் செ.புனிதவள்ளி செந்தில் கணேஷ், அத்தாணி பேரூர் கழக செயலாளர்  ஏ.ஜி.எஸ்.செந்தில் கணேஷ், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் லோகநாதன்,மாவட்ட பிரதிநிதி ஏ.எம்.எஸ்.மணி ,  சண்முக சுந்தரம், ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கே.எஸ்.பிரகாஷ் ,தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் மு.நாகராஜ் , அந்தியூர்  சட்டமன்ற தொகுதி மருத்துவ அணி அமைப்பாளர் விமலாதித்தன் ,பரூர் துணை  செயலாளர் தங்கவேல், முருகன் , அந்தியூர்  சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் யுவராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:

Post a Comment