• Breaking News

    மயிலாடுதுறையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றம் சார்பில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு பக்தர்கள் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கஞ்சி கலையம் எடுத்து ஊர்வலமாக சென்று வழிபட்டனர்


    ஆடிப்பூரத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றம் சார்பில் உலக மக்கள் நன்மைக்காகவும் அனைவரும் நோயின்றி வாழவும் பக்தர்கள் கஞ்சி கலையம் எடுத்து வழிபாடு செய்தனர். சின்னகடை தெருவில் அமைந்துள்ள சியாமளாதேவி ஆலயத்தில் இருந்து சிறப்பு பூஜைகள் செய்து  மேளதாள வாத்தியங்கள் முழங்க 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஊர்வலமாக கஞ்சி கலயத்தை தலையில் சுமந்தவாறு எடுத்து முக்கிய வீதிகள் வழியாக  சென்றனர்.


    வழி நெடுவிலும் பக்தர்கள் ஓம் சக்தி என கோஷமிட்டபடியும் , பெண்கள் சுவாமி அருள் வந்து ஆடியும் பேரணியாக சென்றனர்.தொடர்ந்து வழிபாட்டு மன்றத்தை அடைந்து அங்கு தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். ஆதிபராசக்தி மன்றம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் மேற்கொண்டனர்.

    No comments