மதுரையில் ஆதி சிவனுக்கு சங்குகளால் அலங்காரம் - MAKKAL NERAM

Breaking

Monday, July 3, 2023

மதுரையில் ஆதி சிவனுக்கு சங்குகளால் அலங்காரம்


 மதுரை தவிட்டு சந்தை பகுதியில் சனிப்பிரதோஷ பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. மதுரை தவிட்டு சந்தை பந்தடி 5வது தெருவில் உள்ள அருள்மிகு ஶ்ரீ ஆதி சிவன் கோவிலில் நேற்று முன்தினம் மாலை சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் சங்கு கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனைகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று பௌர்ணமி தினத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெறும்.

No comments:

Post a Comment