அரசு பள்ளியில் பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நிலை குறைவு - MAKKAL NERAM

Breaking

Saturday, July 15, 2023

அரசு பள்ளியில் பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நிலை குறைவு

 


திருவண்ணாமலை மாவட்டம் தண்டரை அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. அங்கு மதிய உணவு கொண்ட ஐம்பதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.


பல்லி விழுந்த உணவை உட்கொண்டதால் மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 50 மாணவர்களுக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment