அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி மனு - MAKKAL NERAM

Subscribe Us

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, July 15, 2023

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி மனு

 


அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்சியில் பல்வேறு பிளவுகள் ஏற்பட்டுள்ளது. இதில் முக்கியமான ஒன்று ஒற்றை தலைமை பிரச்சனை, இந்த ஒற்றை தலைமை பிரச்சனையால் அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் இரு அணிகளாக பிரிந்தனர். இருவரும் மாறி, மாறி நிர்வாகிகளை நியமிப்பது, நீக்குவது என நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால், கட்சியில் பிளவு ஏற்பட்டு, தொண்டர்களிடையே குழப்பம் நீடித்தது.


பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்குழுவை கூட்டி, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், ஓபிஎஸ் மற்றும் அவரை சார்ந்தவர்களை கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த விவகாரம், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் வரை சென்றது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது என தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல், பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.


இதுதொடர்பாகவும் ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதில் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது. இதை எதிர்த்து ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனுவும் தாக்கல் செய்துள்ளார். இதனிடையே, அதிமுக தலைமை அலுவலகமும் இபிஎஸ் இடம் சென்றது. அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தில் இபிஎஸ் அணியினர் சமர்ப்பித்தனர். இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.


பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளையும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இது ஓபிஎஸ் தரப்பினருக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இதனைத்தொடர்ந்து, சமீபத்தில் அனைவரும் பார்க்கும்படி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என இந்திய தேர்தல் ஆணையம் இணையத்தில் பதிவேற்றப்பட்டதாக  வெளியாகியிருந்தது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் என தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.


இந்த நிலையில், அதிமுக தலைமை விவகாரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி மனு அளித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக ஏற்றுக் கொண்டுள்ளதாக, இபிஎஸ் தரப்பினர் போலியான செய்தியை பரப்பி வருவதாக புகார் தெரிவித்துள்ளார். அந்த மனுவில், தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தவறான செய்தியை பரப்பி வருகிறது.


அதிமுக தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது, தீர்ப்பு இறுதியாகவில்லை. இரட்டை தலைமை பதவியே இன்று வரை தேர்தல் ஆணைய இணையதளத்தில் உள்ளது. ஈபிஎஸ் அனுப்பிய புதிய நிர்வாகிகள் பட்டியல் நிபந்தனையுடனேயே தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம். உறுப்பினர்களை சேர்த்து, போலி ஆவணங்களை சமர்ப்பித்து அதிமுகவை கைப்பற்ற முயற்சிக்கிறார் எடப்பாடி பழனிசாமி. மேலும், தேர்தல் ஆணையம் மிக நியாயமான முறையில் நடந்து கொள்ள வேண்டும் எனவும் புகழேந்தி கோரிக்கை வைத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here