சத்தியமங்கலம் நகை வியாபாரிகள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகை வியாபாரிகள் சங்க கூட்டம் நடைபெற்றது.இதில் முன்னாள் தலைவர் கே.எம்.விவேகானந்தன் மற்றும் முன்னாள் பொருளாளர் ஜி. ஶ்ரீனிவாசன் (எ) ஹரி முன்னிலையில் புதிய நிர்வாகிகள் ஏக மனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்கள். அதன்படி தலைவராக எஸ்.என்.ஜவஹர் , செயலாளராக பி. மகேந்திரன் , பொருளாளராக கே.ரமேஷ்( ராகவி) , துணை தலைவராக கே.பி.தனசேகரன் , துணை செயலாளராக ஆர்.டி.ஆர்.ரமேஷ், துணை பொருளாளராக எஸ்.சரவணன் , கௌரவ தலைவராக கே.எம்.விவேகானந்தன் மற்றும் ஜி. ஶ்ரீனிவாசன் (எ) ஹரி ஆகியோர் பதவியேற்று கொண்டார்கள்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சிவன் மூர்த்தி
No comments