• Breaking News

    மரம் நடுவோம் மழை பெறுவோம் என்பதை வலியுறுத்தி - கழுகு மலையில் ஸ்கேட்டிங் மூலம் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிய பள்ளி மாணவி


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கழுகாசல மூர்த்தி கோவில் முன்பாக சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம் சார்பாக மரம் நடுவோம் மழை பெறுவோம் என்பதை வலியுறுத்தி கோவில்பட்டி பள்ளி மாணவி ரவீணா ஸ்கேட்டிங் மூலம் பொது மக்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்வு நடைபெற்றது . இந்நிகழ்வை கோவில்பட்டி வட்டாட்சியர் லெனின் துவக்கி வைத்தார்.


    கழுகாசல மூர்த்தி  கோவில் முன்பு இருந்து தொடங்கிய  ஸ்கேட்டிங் ஆர்.சி. சர்ச் வரை 2 கிலோ மீட்டர் தூரம்   பேரூராட்சி முக்கிய பகுதிகளில் ஸ்கேட்டிங் செய்து பொதுமக்களுக்கு 1000 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வழங்கினார்.


    இந்நிகழ்வில் சுவாமி விவேகானந்தா ஸ்கேட்டிங் கழகம் மாநில ஆலோசகர் ராஜகோபால், கழுகுமலை தீயணைப்பு நிலைய அலுவலர் லிங்கதுரை, மற்றும் கோவில் ஊழியர்கள் காவல்துறையினர் உள்ளிட்ட நிகழ்வில் கலந்து கொண்டனர்.

    No comments