• Breaking News

    குத்தாலத்தில் கம்பர் கழக துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது


    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கம்பர் கழக துவக்க விழா நிகழ்ச்சியானது நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு கம்பர் கழகத் தலைவர் ஜெ.நடராஜன் தலைமை வகித்தார்,துணைத் தலைவர்கள் த.வீரமணி,பி.இராஜமாணிக்கம்,துணைச் செயலாளர்கள் சிவா.இராஜலிங்கம், ஜி.இராமலிங்கம்.தலைமை ஆலோசகர்கள்  என்.குமார்,இரா.சூரியநாராயணன், கோ.ஜெயராமன்,உதயா கோ.பாலச்சந்திரன்,சிவசக்திவேல்,ரோட்டரி சங்கத் தலைவர் சி.மார்ட்டின்,ரோட்டரி சங்க உதவி ஆளுனர் எஸ்.பாண்டியன், அமைப்பாளர் த.செ.இளமுருகச் செல்வன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கம்பர் கழக செயலாளர் மு.ஜானகிராமன் அனைவரையும் வரவேற்றார்.மயிலாடுதுறை திருக்குறள் பேரவைச் செயலர் நல்லாசிரியர் விருதாளர் இரா.செல்வகுமார் தொடக்க உரையாற்றினார் இதில் சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை திருக்குறள் பேரவைத் தலைவர் சி.சிவசங்கரன் கலந்து கொண்டு கம்பர் கழகத்தை துவக்கி வைத்து பின்னர் சிறப்புரையாற்றினர்.இவ்விழாவில் மாரியப்பன் மற்றும் பல்வேறு தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார்கள்.முடிவில் குத்தாலம் கம்பர் கழக பொருளாளர் ந.சு மோகன் நன்றியுரையாற்றி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

    No comments