• Breaking News

    சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கப் பணியாளர்கள் செயற்குழுக் கூட்டம்


    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சேலம் நாமக்கல் மாவட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்க பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் செயற்குழு கூட்டம் ராசிபுரம் கூட்டுறவு வீட்டு வசதி சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.


    இந்த செயற்குழு கூட்டத்தில் தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் மாநில பொதுச் செயலாளர் க. முருகேசன், பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

    தொடர்ந்து இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


     தனிநபர்கள் மட்டுமல்லாமல் உள்ளாட்சி அமைப்புகள் நலச்சங்கங்கள் போன்றவற்றால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ரூ.1000/- கோடிக்கு மேல் மதிப்புள்ள சங்க சொத்துக்களை மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,ஏற்கனவே மீட்கப்பட்ட சொத்துக்களை முறையாக விற்பனை செய்து சங்க வளர்ச்சிக்கு பயன்படுத்த ஏதுவாக அமைக்கப்பட்ட விலை நிர்ணயக் குழு கூட்டம் அதிகாரிகளின் மெத்தனத்தால் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக கூடாமல் உள்ளதை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது,கடந்த 03.06.2022ல் அமைக்கப்பட்ட ஊதிய சீரமைப்புக் குழுவும் 07.09.2022ல் அமைக்கப்பட்ட ஓய்வூதியக் குழுவும் நாளது தேதிவரை செயல்படாததை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது,பிரதம சங்கங்கள் மற்றும் தலைமை இணையம் இடையே கடன் ஒத்திசைவு முடிக்கப்பட்டு ஓராண்டு கடந்தும் அதன்படி கடன் கணக்குகளை மாற்றி அமைக்காமல் பழைய நிலையிலே கடன் வசூல் செய்யும்படி வற்புறுத்துவதையும் இச் செயற்குழு  வன்மையாக கண்டிக்கிறது எனவும்,மேலும் கடன் தொகை முழுவதையும் செலுத்தியுள்ள சுமார் 6000 உறுப்பினர்களின் ஆவணங்களை உடனடியாக விடுவிக்க அரசு ஆணையிடவேண்டும்.



    பிரதம சங்கங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட டிக்ரி உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் இணையம் உடனடியாக கைவிட வேண்டும்,பணி ஓய்வு பெற்ற / பெறவுள்ள பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ.10,000/- ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்,சொத்துக்கள் மற்றும் பணியாளர்கள் இருந்தும் செயல்படாத சங்கங்களை கலைக்காமல் அருகில் உள்ள சங்கங்களோடு இணைக்க வேண்டும்,இணையத்தில் பெற்ற கடன்களுக்கு தள்ளுபடி திட்டம் முடிவடையும் போது நிலுவையில் உள்ள அசல் மற்றும் வட்டியான சுமார் 1200 கோடி தொகையினை ஒருங்கிணைத்து மறு கடன்களாக மாற்றி வசூலிக்க ஆணை வழங்க வேண்டும்,சங்கத்தில் கடன் பெற்ற உறுப்பினர்களுக்கு பல நூறு கோடியை தள்ளுபடியாக வழங்கிய இணையம், சம்பளம் பெறாமல் வறுமையில் வாடும் சங்கப் பணியாளர்களின் வீட்டுவசதி கடன்களுக்கான அபராத வட்டி சில ஆயிரம் ரூபாயை கூட வசூலிப்பது வன்மத்தின் உச்ச நிலையாகும். உடனடியாக பணியாளர் கடன்களுக்கான அபராதவட்டி, வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றினர். 


    மேலும் தொடர்ந்து இதே நிலை நீடிக்கும் ஆனால் தொடர் போராட்டம் அறிவிப்பு ,கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பணியாளர்கள் 30.08.2023 செப்டம்பர் முதல் வாரம் மொத்த கோரிக்கை மனுக்கள் அனுப்பி வைத்தல், கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிதல்,மண்டல துணைப்பதிவாளர் அலுவலகங்கள் முன்பு தர்ணா, சென்னை மாநகரில் கூட்டுறவு வங்கி ஊழியர் போராட்டம்,ஊழியர்களுடன் இணைந்து மாநில அளவிலான தர்ணாவில் பங்கேற்றல். கூட்டுறவு வங்கி ஊழியர்களுடன் இணைந்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் போன்ற பல்வேறு கட்ட போராட்டங்கள் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


    இந்த செயற்குழு கூட்டத்தில் மாநில பொருளாளர் எஸ். மோகன் குமார், மாவட்ட பொதுச் செயலாளர் கே.பி. முருகேசன், மாவட்ட பொருளாளர் டீ .வெங்கடேசன், மாவட்ட இணை செயலாளர் சி. சுப்பிரமணியன், ராசிபுரம் கூட்டுறவு வீட்டு வசதி சங்க செயலாளர் கே. விஸ்வநாதன், உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், பணியாளர்கள் என பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


    ஜெ.ஜெயக்குமார் 9942512340 

    நாமக்கல் மாவட்டம் 


    No comments