சோழவித்யாபுரம் புனித சந்தன மாதா ஆலய ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார பெரிய தேர்பவனி திரளான பக்தர்கள் பங்கேற்பு
நாகப்பட்டினம் மாவட்டம், சோழவித்யாபுரத்தில் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையின் தாயான புனித சந்தன மாதா ஆலயம் அமைந்துள்ளது.
இவ்வாலயத்தில் ஆண்டு திருவிழாவானது ஒவ்வொரு வருடமும் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.அதன்படி நிகழாண்டிற்கான ஆண்டு திருவிழா கடந்த 20ம்
தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார பெரிய தேர்பவனி வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதனையொட்டி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மிக்கேல் சம்மனசு, அந்தோணியார்,சூசையப்பர், சுவக்கின், புனித சந்தனமாதா ஆகியோர் எழுந்தருளினர்.
தொடர்ந்து ஆலய பங்கு தந்தை டேவிட் செல்வகுமார் தலைமையில் நவநாள், ஜெபம் உள்ளிட்ட சிறப்புத்திருப்பலி நடைபெற்றது தொடர்ந்து சப்பரம் புனிதம் செய்யப்பட்டு ஆலய வளாகத்திலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியே வலம் வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.
வழிநெடுகிலும் பக்தர்கள் மலர் தூவி வழிபட்டனர் தொடர்ந்து வண்ணமிகு வாணவேடிக்கை நடைபெற்றது, இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர்.
நாகப்பட்டினம் மாவட்ட நிருபர் க. சக்கரவர்த்தி 9788341834
No comments