கரூரில் மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி.... வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுக்கோப்பைகள், பதக்கங்கங்கள்,சான்றிதழ்கள் வழங்கப்பட்டது....
கரூர் மாவட்ட இறகு பந்து சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டியானது இரண்டு கட்டங்களாக நான்கு பிரிவுகளில் நடைபெற்றது. கடந்த 22 மற்றும் 23ஆம் தேதிகளில் சீனியர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போட்டி கே.வி.பி நகர் பகுதியில் அமைந்துள்ள அரங்கில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆகிய பிரிவுகளில் நடைபெற்று முடிந்தது.
அதனை தொடர்ந்து 29 மற்றும் 30 ஆகிய இரண்டு தேதிகளில் சப் ஜூனியர் மற்றும் ஜூனியர் பிரிவுகளில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகளானது பாரி நகர் பகுதியில் அமைந்துள்ள எல்.எஸ்.ஏ அரங்கில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது.
இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு கோப்பைகளையும், பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட இறகு பந்து சங்கத்தின் தலைவர் விசா சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கரூர் மோகன் ராஜ்
No comments