கீழ்வேளூர்: தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் - MAKKAL NERAM

Breaking

Saturday, July 29, 2023

கீழ்வேளூர்: தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

 


நாகை அருகே கீழ்வேளூரில் மணிப்பூர் மாநில பூர்வ குடிகள் மீதான வன்முறை தாக்குதல் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. 

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் மணிப்பூர் மாநில பூர்வ குடிகள் மீதான தாக்குதல் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. மாவட்ட தலைவர் கீதம் லெனின் தலைமையில் நடைப்பெற்ற ஆர்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார். தொடர்ந்து வன்முறையை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மணிப்பூர் மாநில பிஜேபி அரசுகளை கண்டித்தும், வன்முறையில் ஈடுப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்த  கயவர்களை கூண்டோடு கைது செய்ய கோரியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் அபுபக்கர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணை செயலாளர் ஏ.சிவக்குமார், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பாலு, பாண்டியன், வி.தொ.ச ஒன்றிய செயலாளர் துரைராஜ், வழக்கறிஞர் காளிதாசன், வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் இளையராஜா, சிஐடியூ பழனிச்சாமி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் மோகன் இங்கர்சால் உள்ளீட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தோழமை இயக்கங்களைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.


நாகை மாவட்ட நிருபர்

க.சக்கரவர்த்தி

No comments:

Post a Comment