கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் சௌந்தரநாயகி உடனுறை அலங்காரவல்லி தெய்வத் திருமண பெரு விழா முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது


கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமான கரூர் பசுபதீஸ்வரர் சுவாமிக்கு வருடம் வருடம் ஆடி மாதம் தெய்வத் திருமண விழா நடத்தப்படுவது வழக்கம் அதேபோல் இவ்வாண்டும் கருவூர் ஸ்ரீ மகா அபிஷேக குழுவின் வெள்ளி விழா ஆண்டு ஆடி தெய்வத் திருமண விழா மங்கள வாத்தியங்கள் முழங்க முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு வெகு விமர்சையாக துவங்கப்பட்டது. மேலும் இதைத் தொடர்ந்து வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் 6-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து பல்வேறு இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் கோவில் நிர்வாகத்தினாலும் பொதுமக்களாலும் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


கரூர் மோகன்ராஜ்

Post a Comment

0 Comments