கேரளா முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடல்நலக்குறைவால் காலமானார் - MAKKAL NERAM

Breaking

Tuesday, July 18, 2023

கேரளா முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடல்நலக்குறைவால் காலமானார்

 


கேரளா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி இன்று அதிகாலை பெங்களூருவில் உயிரிழந்தார். 50 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்ட வந்த உம்மன் சாண்டி கடந்த 2004 மற்றும் 2011 ஆகிய ஆட்சி காலகட்டத்தில் கேரளா மாநில முதல்வராக பொறுப்பில் இருந்துள்ளார்.


79 வயதான இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் உள்ள தனது மகன் கண்காணிப்பில், பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4 மணிக்கு உம்மன் சாண்டி காலமானார்.


இவரது உடல் தற்போது பெங்களூருவில் இருந்து அவரது சொந்த ஊரான கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்திற்கு கொண்டு வரப்படவுள்ளது என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment