• Breaking News

    ஸ்ரீ மகா காளியம்மன் திருநடன உற்சவ திருவிழா நிறைவு பெற்றது

     


    மயிலாடுதுறை மாவட்டம் திருத்துருத்தி என்னும் குத்தாலம் காளியம்மன் கோவில் தெருவில் ஸ்ரீ மகா காளியம்மன் கோவில் அமைந்துள்ளது இந்த கோவிலின் திருநடன உற்சவ திருவிழா கடந்த 25ஆம் தேதி சக்தி கரகம் எடுத்து இரவு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.கடந்த 5ஆம் தேதி கோவிலிலிருந்து காளி புறப்பாடு திருநடனத்துடன் தொடங்கி குத்தாலத்தில் உள்ள பல்வேறு வீதிகளுக்கு சென்றது பக்தர்கள் வீடுகள் தோறும் மாவிளக்கு தீபமிட்டு தீபாராதனை எடுத்தும் வழிபாடு செய்தனர்.நேற்று 11ஆம் நாள் பந்தல் காட்சி அளித்ததுடன் திருநடன உற்சவம் நிறைவு பெற்றது பின்னர் கோயிலில் எழுந்தருளி தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காளியம்மனை வழிபாடு செய்தனர்.இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை காளியம்மன் கோவில் தெருவாசிகள் மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர்கள் சிறப்பாக செய்திருந்தனர் இன்று மாலை மகா காளியம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    No comments