தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஈரோடு வடக்கு மாவட்டம் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் கழக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா ஆலோசனைக் கூட்டம் ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பி .கே. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வடக்கு மாவட்ட பொருளாளர் எஸ். கே .சுப்பிரமணியம் , வடக்கு மாவட்ட துணை செயலாளர் எம். வாசுதேவன் , தலைமை செயற்குழு உறுப்பினர் பி.எம்.நல்லசாமி, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் ப.சிவன்மூர்த்தி, ஜி.சரவணகுமார், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் ரவி, சத்தி ஒன்றிய செயலாளர் கே.என். சஜித் , பவானிசாகர் ஒன்றிய செயலாளர் பி.கே.தங்கவேல் , டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம், அந்தியூர் ஒன்றிய செயலாளர் சுதாகர் , சத்தி நகர செயலாளர் எஸ். கே.ராஜேந்திரன் , கோபி நகர செயலாளர் ஜி.எஸ்.மணிகண்டன் , கே. என். பாளையம் பேரூர் செயலாளர் கந்தசாமி , அரியப்பம்பாளையம் பேரூர் செயலாளர் பி.எம்.வடிவேல் , அந்தியூர் பேரூர் கழக செயலாளர் முனாப் பாய் , ஒன்றிய அவைத்தலைவர் எம்.கண்ணன், ஒன்றிய துணை செயலாளர் எம்.தங்கவேல், நகர அவைத்தலைவர் ரொட்டி ஆறுமுகம் , நகர பொருளாளர் பங்க் பர்கத், நகர கேப்டன் மன்ற செயலாளர் எஸ்.எம்.கணேசன் , பாலசுப்பிரமணியம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் ஆகஸ்ட் 25ஆம் தேதி கழக தலைவர் கேப்டன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து இடங்களிலும் கழக கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்குவதென்றும் அருள்மிகு பண்ணாரி அம்மன் கோயிலில் கழக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி சிறப்பு தரிசனம் , அன்னதானம் வழங்குவது போன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments