தமிழ்ப்புலிகள் கட்சி ஈரோடு மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பவானிசாகரில் தமிழ் புலிகள் கட்சி ஈரோடு மேற்கு மாவட்டத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் கட்சியின் மாநில தலைவர் நாகை திருவள்ளுவன் தலைமையில் மாவட்ட செயலாளர் ப.பாலசுப்பிரமணியம் , மேற்கு மண்டல நிதி செயலாளர் அப்துல்லா முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலையொட்டி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு உறுதுணையாக தமிழ்ப்புலிகள் கட்சி மேற்கு மாவட்டங்களில் களப்பணியை முன்னெடுக்கும் விதமாக சிறப்பாக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் இளவேனில் , மாநில அமைப்பு செயலாளர் கோவை சபாபதி , மாநில கொள்கை பரப்பு செயலாளர் சிற்றரசு , மண்டலர் நிர்வாகி பாறையூர் செந்தில் , ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் வேங்கை பொன்னுச்சாமி , இளம் புலிகள் அணி செயலாளர் சின்னராஜ் , மாவட்ட தொண்டர் அணி செயலாளர் ராஜன், கோபி சட்ட மன்ற தொகுதி செயலாளர்
தீனதயாளன் , பவானிசாகர் சட்ட மன்ற தொகுதி செயலாளர் ரகு வள்ளுவன் , பவானிசாகர் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் , நம்பியூர் ஒன்றிய செயலாளர் ஜான் எலியா , சத்தி ஒன்றிய செயலாளர் பிரகாஷ், கோபி ஒன்றிய செயலாளர் ஸ்ரீ சக்தி , சத்தி நகர செயலாளர் புவனேஸ்வரன் , நம்பியூர் நகர செயலாளர் கவியரசு , எலத்தூர் பேரூராட்சி செயலாளர் சிவகுமார் மற்றும் 40க்கும் மேற்பட்ட கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டு மாவட்ட செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1.ஒரே நாடு ஒரே மொழி ஒரே கல்வி என்ற பாஜகவின் பாசிச சித்தாந்தத்தை அடுத்து பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த துடிக்கும் மோடி பாஜக அரசை தமிழ் புலிகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது முற்றிலும் தமிழ் புலிகள் கட்சி பொது சிவில் சட்டத்தை எதிர்க்கிறது.
2 .பவானிசாகர் அணையில் சாயக் கழிவுகள் கலப்பது துர்நாற்றம் வீசுவதும் கண்டித்து அனைத்து கட்சி கூட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியும் சம்பந்தப்பட்ட ஆலை நிர்வாகங்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மீண்டும் மக்கள் ஒன்று திரட்டி மிகப்பெரிய ஒரு ஆர்ப்பாட்டம் பவானிசாகரில் நடத்தப்படும்.
3. புளியம்பட்டி நகராட்சி சந்தை திடலில் இயங்கி வந்த மாட்டு இறைச்சி கடைகளை அப்புறப்படுத்திய நகராட்சி அரசு ஊழியர்கள் சாதிய தீண்டாமையோடு நடந்து கொண்டதை வன்மையாக கண்டிக்கிறோம் மேற்கொண்டு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்ட மாட்டிறைச்சி கடைகளை மீண்டும் அதே இடத்தில் அவர்களுக்கு இடம் ஒதுக்கி தர வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்தையும் , அரசையும் தமிழ் புலிகள் கட்சி வலியுறுத்துகிறது.
4. பவானிசாகர் கரிதொட்டாம்பாளையம் பகுதி அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வேண்டி வட்டாட்சியரிடம் மனு கொடுத்தும் இன்னும் நடவடிக்கை ஏதுமில்லை உடனடியாக மக்களுக்கு இருப்பதற்கு இலவச வீட்டு மனை பட்டா கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும் என்று சத்தியமங்கலம் வட்டாட்சியர் அவர்களை தமிழ் புலிகள் கட்சி வலியுறுத்துகிறது.
5 .கோணமூலை ஊராட்சி நஞ்சப்ப கவுண்டர் புதூர் அருந்ததியர் மக்கள் வசிக்கும் பகுதியில் புதிய கழிப்பறை கட்டியும் மூன்று ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் உள்ளது அதனை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அடிப்படைத் தேவைகளை செய்து தரவும் தமிழ் புலிகள் கட்சி வலியுறுத்துகிறது.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments