புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காந்திபூங்கா சாலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோலார் பகுதியைச் சேர்ந்த லெட்சுமணசெளத்ரி என்பவர் பல சரக்கு மொத்த வியாபாரக் கடை நடத்தி வருகிறார்.
இவரது கடையில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக அறந்தாங்கி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் எஸ்.ஐ இளமாறன் லெட்சுமணசெளத்ரியின் கடை மற்றும் குடோனில் சோதனை செய்தபோது அங்கு தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட சுமார் ரூ.38,516 மதிப்பும், கள்ளச்சந்தையில் பல லட்ச ரூபாய் மதிப்பும் உள்ள 43 கிலோ ஹான்ஸ்,கூல் லிப்,விமல் உள்ளிட்ட புகையிலை பொருள்களை பறிமுதல் செய்து,லெட்சுமண செளத்ரி, மனோஜ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
No comments:
Post a Comment