மயிலாடுதுறையில் நடைபெற்ற திருச்சி மண்டல அளவிலான மக்கள் நீதி மைய ஆலோசனைக் கூட்டம்
மயிலாடுதுறையில் உள்ள தனியார் ஹோட்டலில் மக்கள் நீதி மய்யம் திருச்சி மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றது.மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது.இதில் சிறப்பு அழைப்பாளராக பொதுச்செயலாளர் அருணாச்சலம் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.முன்னதாக பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் அரசு பள்ளிகளில் பயின்று மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து பரிசுத்தொகை வழங்கப்பட்டது.பின்னர் மணிப்பூர் சம்பவத்திற்கு பாஜக அரசிற்கு கண்டனம் தெரிவித்தும் மற்றும் என்எல்சி நிறுவனத்திற்கும் எதிராகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொதுச் செயலாளர் அருணாச்சலம் கூறியதாவது :-
முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் 12 பாராளுமன்ற தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு மூன்று பாராளுமன்ற தொகுதிகளில் வார்டு உறுப்பினர் மற்றும் பூத் கமிட்டி நியமிப்பதற்கு நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.மற்ற தொகுதிகளிலும் பணிகள் தொடங்கி இருப்பதாகவும் கூறினார்.
பாஜக தலைவர் அண்ணாமலை சர்வாதிகாரத்தை நிலை நிறுத்த பாதயாத்திரியை மேற்கொண்டு இருப்பதாகவும் ,பாதயாத்திரை காரணமாக தமிழகத்தில் பெரிய அளவில் எந்த மாற்றமும் நிகழாது என கூறினார்.
அனைத்து தரப்பு ஊழல்கள் பட்டியலையும் அண்ணாமலை ஆளுநரிடம் தர வேண்டும் . கூட்டணியில் இருப்பவர்கள் குறித்தும் ஊழல் புகார்களை தெரிவிக்க வேண்டும் என கூறினார்.
வருகின்ற ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மண்டல வாரியாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.
No comments