கரூரில் கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஸ்ரீ ஈசன், வள்ளி கும்மி குழுவினரின் அரங்கேற்ற விழா நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமியர் பங்கேற்பு
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கணபதிபாளையம் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஸ்ரீ ஈசன், வள்ளி கும்மி அரங்கேற்ற விழா இன்று நடைபெற்றது.
கணபதிபாளையம் பகுதியில் அமைந்துள்ள பகவதி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர், நூற்றுக்கணக்கான பெண்கள் கோவில் வளாகத்தில் இருந்து முளைப்பாரி எடுத்துக் கொண்டு ஊர்வலமாக தாந்தோணிமலை கடைவீதி, அரசு கலைக் கல்லூரி வழியாக ஸ்ரீ ஊரணி காளியம்மன் கோவிலை வந்தடைந்தனர். அங்கு மைதானத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் முருக பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபாடு நடத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஸ்ரீ ஈசன், வள்ளி கும்மி அரங்கேற்ற விழா நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமியர் ஒரே வண்ணத்திலான பாரம்பரிய உடையணிந்து கலந்து கொண்டு ஒயிலாட்டம் ஆடினர். இதில் கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஸ்ரீ ஈசன் வள்ளி, கும்மி குழு ஒருங்கிணைப்பாளர் பழனிவேலு மற்றும் நிர்வாகிகள் உள்பட திரளான மக்கள் கலந்து கொண்டு ஒயிலாட்டத்தை கண்டு ரசித்தனர்.
கரூர் மோகன் ராஜ்
No comments