• Breaking News

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வழங்குதல் தொடர்பாக குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனான கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது


    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டணியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வழங்குதல் தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.இக்கூட்டத்திற்கு குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார்.

    குத்தாலம் தாசில்தார் இந்துமதி,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கஜேந்திரன்,உமாசங்கர்,ஒன்றிய குழு துணைத் தலைவர் முருகப்பா,மண்டல துணை வட்டாட்சியர் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த கூட்டத்திற்கு மயிலாடுதுறை உதவி செயற் பொறியாளர் ராஜேந்திரன் கலந்து கொண்டு குத்தாலம் வட்டாரத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் செயலாக்கம் மற்றும் முகாம் நடைபெறும் போது உள்ளாட்சியின் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார்.

    இந்த கூட்டத்தில் 51 ஊராட்சி மன்ற தலைவர்கள்,ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள்,மண்டல  துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    No comments