திருச்செங்கோடு ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை பணிகளை எம்எல்ஏ ஆய்வு
திருச்செங்கோடு ஒன்றிய பகுதிகளில் ஒன்பது இடங்களில் முதலமைச்சர் சாலைகள் மே்மபாட்டு திட்டத்தில் அமைக்கப்பட்ட சாலை பணிகளை குறிப்பிட்ட அளவு உயரம் இருக்கிறதா நீளம் இருக்கிறதா அகலம் இருக்கிறதா தரமாக உள்ளதா என்பது குறித்து திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் ஆய்வு செய்தார், இறையமங்கலம், பெருமாள் மலை பகுதியில் அமைக்கப்பட்ட ஆயிரத்து 360 மீட்டர் சாலை திருப்திகரமாக இல்லாததால் மீண்டும் சீர் செய்து அமைத்து தர ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார். திருச்செங்கோடு ஒன்றியம் திருமங்கலம் ஊராட்சி அரியானூர் சாலை முதல் பெரிய கோட்டப்பாளையம் வரையிலான 700மீட்டர்சாலை, புதுப்பாளையம் ஊராட்சி அரியானூர் சாலை முதல் பரவள்ளிக்காடு, வரையிலானஆயிரத்து180 மீட்டர் சாலை புதுப்பாளையம் ஊராட்சி அரியானூர் சாலை முதல் ஆன்ட்ரா பட்டி வரையிலான ஆயிரத்து 490மீட்டர் சாலை தி. கைலாசம்பாளையம் ஊராட்சி அப்பூர் பாளையம் சிலோன் காலனி 790 மீட்டர்சாலை எஸ் இறையமங்கலம் ஊராட்சி பெருமாள் மலை ஆயிரத்து 360 மீட்டர்சாலை,எஸ். இறையமங்கலம் ஊராட்சி அணிமூர் சாலை முதல் பொய்யேரி மயானம் வரை455மீட்டர் சாலை எஸ். இறையமங்கலம் ஊராட்சி கொளத்துப்பாளையம்வரை 710மீட்டர் சாலை பட்லூர் ஊராட்சி சாலப்பாளையம் முதல் வெள்ளியம்பாளையம் வரையிலான 710மீட்டர் சாலை பட்லூர் ஊராட்சி இறையமங்கலம் முதல் சாலப்பாளையம் வரையிலான சாலை ஆகியவற்றின் உயரம் அகலம் தரம் ஆகியவைகள் குறித்து திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் இன்று நேரில் ஆய்வு செய்தார், நவீன எந்திரத்தை கொண்டு தார் சாலையை துளையிட்டு அந்தப் பகுதியில் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி உயரமாக தார் சாலை அமைக்கப்பட்டுள்ளதா அகலமாக அமைக்கப்பட்டுள்ளதா தார் சாலையின் தரம் எப்படி உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்தார்,ஆய்வுப் பணியின் போது ஒன்றிய பொறியாளர் சுமதி, உதவி பொறியாளர் சீனிவாசன் மற்றும் ஒப்பந்ததாரர்கள் உடன் இருந்தனர் எஸ் இறைய மங்களம் ஊராட்சி பெருமாள் மலையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள சாலையில் சாலைகள் தரமாக அமைக்கப்படவில்லை என்பதால் அந்த சாலையை சீரமைத்து தர வேண்டுமென அதிகாரிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் உத்தரவிட்டார்.
ஜெ.ஜெயக்குமார் 9942512340
நாமக்கல் மாவட்டம்
No comments