கரட்டூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் புதிய சமையல் கூடத்தை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் திறந்து வைத்தார்
ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம், அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட, கரட்டூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட சமையல் கூடத்தை சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும், சத்தி தெற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் கே.சி.பி. இளங்கோ ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். மேலும் இவர்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலர் சு. பிரேம்குமார் (கி. ஊ) , வட்டார வளர்ச்சி அலுவலர் அ.அப்துல்வகாப் , தலைமை ஆசிரியர், ஊர் கவுண்டர், கிருஷ்ணசாமி, கே.சி.பி.உதயகுமார், மாமரத்து தோட்டம் ராசு ,ஒன்றிய துணை செயலாளர் டி.பி.அசோகன் மற்றும் காலை சிற்றுண்டி அமைப்பாளர்கள், இளைஞரணி அமைப்பாளர், சந்தோஷ்குமார், திமுக நிர்வாகி கோவிந்தராஜ் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி 9965162471.
No comments