கணவனை சரமாரியாக வெட்டிய மனைவி..... காரணம் என்ன?
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கணவனை மனைவி 15 இடங்களில் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயில் ஒன்றில் பணியாளராக வேலை செய்து வரும் சுவாமிநாதன் (37) என்பவரின் மனைவி சுதா (36). இருவருக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.தனது சித்தியுடன் கணவர் சுவாமிநாதன் பழகுவதாக கூறி சுதா தனது கணவரை கேட்டுள்ளார். அதற்கு சுவாமிநாதன் மனைவி சுதாவை தாக்கியதாக தெரிகிறது. இதனால் சுதா கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.இந்நிலையில், நேற்று சுவாமிநாதன் வீட்டில் இருந்த போது சுதா காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து 15 இடங்களில் அவரை சரமாரியாக வெட்டினார். கழுத்து, மார்பு என சுவாமிநாதனுக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டது.
ரத்த வெள்ளத்தில் துடித்த சுவாமிநாதன் அண்ணாமலைநகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சுவாமிநாதன் அளித்த புகாரின் பேரில் இந்த சம்பவம் குறித்து சிதம்பரம் காவல்துறையினர் சுதா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments