• Breaking News

    முதலமைச்சரின் காலை உணவு திட்டம் திருச்செங்கோட்டில் துவக்கம்


     தமிழகம் முழுவதும் உள்ள 31 ஆயிரம் அரசு பள்ளிகள் 17 லட்சம் மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டம் தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப் பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு ஒன்றியம் தேவனாங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் தொடங்கி வைத்தார்.  தமிழகத்தில்  துவக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் காலையில் தொலை தூரத்திலிருந்து பள்ளிக்கு வரும் கிராமப்புற மாணவர்கள் காலை உணவை உண்ணாமல் வருவதை அறிந்த தமிழக அரசு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை உருவாக்கி முதற்கட்டமாக நகராட்சி துவக்கப்பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வழங்கி வந்தது. தற்போது அதனை விரிவாக்கம் செய்து ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் 31 ஆயிரம் அரசு பள்ளிகளில் 17 லட்சம் மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி கிடைக்கும் வகையில் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது இன்று முதல் அந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது அதன்படி திருச்செங்கோடு ஒன்றியம் தேவனாங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி வட்டாட்சியர் விஜயகாந்த் வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் தேவனாங்குறிச்சி ஊராட்சி தலைவர் அருண், துணை வட்டார வளர்ச்சி அலுவர்கள் பாலவிநாயகம், வளர்மதி, பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி உள்ளிட்ட பலரும். கலந்து கொண்டனர் .

    திருச்செங்கோடு ஒன்றிய பகுதிகளில் உள்ள 90 பள்ளிகளில் 2642 மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டத்தை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் தொடங்கி வைத்தார் இதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளுடன் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி வட்டாட்சியர் விஜயகாந்த் ஆகியோர் அமர்ந்து உணவருந்தினர் இந்த திட்டத்தை கொண்டு வந்த தமிழக முதல்வருக்கு மாணவ மாணவிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

    ஜெ.ஜெயக்குமார் 9942512340 

    நாமக்கல் மாவட்டம்

    No comments